Wednesday, January 12, 2011

விநாயகர் உணர்த்தும் தத்துவம்

விநாயகர் உணர்த்தும் தத்துவம்யானைத் தலை, மனிதனின் உடல், மிகப்பெரிய தொந்தி, 5 கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம்... இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமான மூஞ்சுறு இப்படி ஒரு கலவை விநாயகர்.

உருவத்தால் வித்தியாசமாக இருக்கும் விநாயகருக்கான வழிப்பட்டு முறைகளும் கொஞ்சம் வித்தியாசம் தான். சிதறு தேங்காய் உடைப்பது, தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது....

விநாயகர் உருவத்துக்கும் சரி, அவருக்கென வழங்கப் படும் வழிப்பாட்டு முறைகளுக்கும் சரி, தத்துவ பின்னணிகள் உண்டு. விநாயகர் ஓங்கார வடிவினர். யானையின் தும்பிக்கை கூட இவர் ஓங்கார வடிவினர் என்பதை காட்ட கூடியதே.

காதுகள்:
விநாயகரின் காதுகள் முறம் போல இருக்கின்றன. முறத்தால் புடைக்கும் போது உமி நீங்கி அரிசி மட்டுமே இருக்கும். அதாவது முறம் தீமையை நீக்கி நல்லதை மட்டுமே கிரகித்து கொல்கிறது. அதுபோலவே மனிதனும் நல்லது மட்டுமே கொள்ள வேண்டும் என்பது விநாயகரின் காதுகள் காட்டும் தத்துவமாகும்.

யானைத் தலை:
யானைத் தலைக்கு பல விசேசங்கள் உண்டு. அக்காலத்தில் பெரியவர்களிடம் பேசும் போது உதடுகளை பொத்திக்கொண்டு பேசுவார்கள். இது பணிவின் அடையாளம். இந்த தத்துவத்தை யானையின் வாய் காட்டுகிறது. பேச்சை குறைப்பது முக்கியம். மவுனம் மேலான யோகம் என்பதை சொல்லாமல் சொல்கிறது யானையின் தலை.

தந்தம்:
விநாயகருக்கும் ஒரு தந்தம் முறிந்து இருக்கும். அதுக்கு பல காரணங்கள்/கதைகள் சொல்வார்கள். அதன் தத்துவம்
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விசேசம். மயிலுக்கு தொகை, மானுக்கு கொம்பு, அதுபோல் யானையின் உறுப்பில் மேலானது, உயர்ந்தது தந்தம். எதையாவது இழந்தால் தான் ஒன்றினை சாதிக்க முடியும். விநாயகர் தன்னிடமுள்ள உயர்வான பொருட்களில் ஒன்றான தந்தத்தை இழந்து தர்மத்தை நிலை நிறுத்தினார் என்பதே அந்த கதைகளில் உள்ள தத்துவம்மூஞ்சுறு:
பெரிய சரீரம் உள்ள விநாயகரை சிறிய மூஞ்சுறு எப்படி தாங்குகிறது?
புராணத்தில் அசுரன் ஒருவன் மூஞ்சுறு ஆனான் என்ற தகவல் உள்ளது.
தத்துவப்படி பார்த்தால் விநாயகர் யோகா சக்திக்கு அதிபதி. மூலாதரத்திலிருந்து யோகாக்னி எழும் நிலையில் மொறு மொறுவென்று ஒரு ஓசை வரும். அந்த ஒலியும், பெருச்சாளியின் ஒலியும், ஒன்றாக இருக்கும் என்பது யோகிகளின் வாக்கு. மூஞ்சுரின் மேல் விநாயகர் இருக்கிறார் என்பது மூலதார சக்தியின் மீது விநாயகர் இருக்கிறார் என்பதை காட்டும் குறியீடாகும்.

பெரிய உடம்பை சிறிய வாகனம் தாங்குகிறது. எதனால்? அவர் உடலை லேசாக்கி அமர்கிறார். அது போல தன்னை தாங்கும் பக்தர்களின் மனதிலும் எந்த கஷ்டங்களும் அழுத்தாமல் உட்காருவார் என்பதை இந்த அமைப்பு காட்டுகிறது.

வழிபாட்டு அமைப்புகள்:
வழிபாட்டு அமைப்புகள் கூட வித்தியாசமானவை, உடலுக்கு நன்மை தருபவை. தலையில் குட்டிக் கொள்வதும், தோப்பு கரணம் போடுவதும், யோக சக்தியை வளர்க்கக் கூடியவை.
இப்படி எல்லா வகைகளிலும் விநாயகர் தத்துவ முத்திரைகளின் வெளிப்பாடகவே காட்சி தருகிறார்.

Monday, January 3, 2011

அன்னையுடன் அனுமன்


Swine Fluஅனுமன் தன் அன்னையுடன் அருள்புரியும் தலம் திருவள்ளூரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள வெண்மனம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. அனுமனின் குருவாகிய சூரிய பகவானின் ஒளி மூலவர் மேல் படருமாறு அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. இங்கு அருள் புரியும் பால அனுமனும், அஞ்சனையும் தன்னை வணங்குவோர்க்கு தட்டாமல் மழலை வரம் தருகிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.
 
SLOKA FOR THE DAY
Sarvarista nivarakamam subhakaram Pingaksamaghapaham
Sitanveshana tatparam kapivaram Kotindu Surya prabham |
Lankadvipa Bhayankaram sakaladam Sugriva sammanitam
Devendradi samasta Deva vinutam Kakustha dutam Bhaje ||
My salutations to this Hanuman who always brings subham - everything that is good - for his devotees and eliminates the bad and the evil. He removes even the traces of bad thoughts and deeds from his devotees. i.e he makes them pure in words, thought and deed. With eyes yellow in colour, he is said to be the best among the kapi- the monkeys. He is the one as bright as koti Suryas and koti Chandras (million Suns and Moons) who went in search of Sita. He was a threat to the island of Lanka, but for his devotees he is the one who bestows everything. He was praised by Sugriva. Being the messenger of Rama (the descendent of Kakusth dynasty) he is revered by all Devas including Indra.