பர்வதம்' என்றால்மலை என்று பொருள். `பர்வதமலை' என்றால்
மலைகளுக்கெல்லாம் மலை... என்று பொருள். கயிலாயத்தில் இருந்து சிவபெருமான்
திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை
திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான
குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
திருக்கழுக்குன்றத்தில் காண்பதுபோல் சில சமயம் இங்கும் சித்தர்கள் கழுகு
வடிவத்தில் பாப்பாத்தி மலையைச்சுற்றிப்பறந்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.
இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள்.
இறங்கும் பாதை
பர்வதமலை மகான் மௌனயோகி விடோபானந்தர் குருஜி மடம் இங்கு வரும் பக்தர்களுக்குச் செய்யும் சேவைகள் மிகவும் போற்றப்பட வேண்டியவை. அவ்வளவு உயரத்தில் முற்றிலும் கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்ட மடம். கீழ் தளத்தில் பக்தர்கள் இரவில் வெளியில் குளிர் மற்றும் மழையில் சிரமப்படாமல் இரவு தங்கிச் செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் ஜெனரேட்டர் போட்டு சுடசுட உணவு அளிக்கிறர்கள். (மேலே எந்தவிதமான மின் வசதியும் கிடையாது) படுத்து உறங்கப் பாய்களும் தந்து உதவுகிறார்கள்.
முன்பெல்லாம் குடிக்கும் தண்ணீர் கீழே இருந்துதான் பாக்கெட் தண்ணீராக சுமை கூலி கொடுத்துக் கொண்டு வருவார்கள். இப்பொது 20000 லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்கு இன்னும் கட்டிடம் விரிவுபடுத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
4000 அடி உயர மலையில் எந்த வசதியும் இல்லாத இடத்தில் இவ்வளவு உதவிகள் அவர்கள் செய்து வருவது மிகவும் உயர்ந்த சேவையாகும். அந்த மடத்திற்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9486268396, 9688505403 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விபரங்கள் அறியலாம். இங்கு ராஜராஜேஸ்வரி விக்ரகம் உள்ளது. இங்கு அமர்ந்து தியானம் செய்ய விரும்புபவர்கள் அமைதியாகச் செய்யலாம்.
பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். நாங்கள் ஏறும்போது தென்மாதிமங்கலம் வழியாகச் சென்றோம். மேலே மடத்தில் இருந்த சுவாமிஜி அவர்கள் இறங்கும்போது கடலாடி வழியில் செல்லுங்கள்,அது சற்று தூரம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்ததால் அந்த வழியில்தான் வந்தோம். மலையை விட்டு இறங்கி ஒரு கிலோ மீட்டரில் அவர்கள் மடத்தின் ஆசிரமம் உள்ளது. பல வருடங்களாக இருந்த மகான் மௌனயோகி குருஜி அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்புதான் முக்தியடைந்ததாகத் தெரிவித்தார்கள்.
அந்த மடத்தின் முகவரி:
பருவதமலை மகான் மௌனயோகி மடம்
கடலாடி (P.O)
திருவண்ணாமலை மாவட்டம்-606908
அன்னதானத்திற்கு உணவுப்பொருட்கள் தர விரும்புபவர்கள் மேற்கண்ட விலாசத்தில் சேர்த்தால் அவர்கள் மேலே கொண்டுபோய் சேர்த்துக்கொள்கிறார்கள்.
மேலே சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்களும் தாங்கள் எந்த விதத்தில் செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டால் நாம் சொல்லும் தொகைக்கு ஏற்ப அபிஷேகப் பொருட்களை அவர்களே மேலே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்கள். நாம் பொருட்களை சுமக்கும் சிரமம் இல்லை. திருவண்ணாமலை போல் இங்கும் 26 கிலோ மீட்டர் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
பர்வதமலை பற்றிய சில யூடியூப் வீடியோ இணைப்புகள் கீழே
Parvathamalai Video1
Parvathamalai2
Parvathamalai 3
கடப்பாறைப்படி ஆரம்பிக்கும் இடம்
மௌனயோகி மடம்
Parvathamalai 4
Parvathamalai
ஓடுகின்ற மேகம் வந்து நம்மைத் தொட்டுப் பேசும் காட்சி
பர்வதமலை மேலிருந்து இறங்கும்போது
Parvathamalai is located near to Thenmathimangalam village, which is 30 kms from Thiruvannamalai(Arunachala).The hill(Parvatamalai) is 4500 feet(Approx) high from the sea level. On the top of the hill, Lord Mallikarjunaswamy(Sivan) temple is located, which is believed to be 2000 years old. This hill is full of herbal(mooligai) plants.
For details in english :
http://parvathemalai.blogspot.in/search/label/About%20Temple
Watch amazing videos of parvathamalai
They need atleast Rs. 40,000 for providing Annadhaanam for 1000s
of devotees who are expected to come during next week on the auspisious
of Annamalai thirukkarthigai Deepam and Pournami . Those who are
interested please contact me or Shri Sridhar Swamigal who is residing at
Parvatha malai top for more than 4 years. He is only looking after the
ashram as of now. His contact no.s are 9688505403, 9486268396. Pls
do the needful at your convenience.
Those who wish to transfer money thro Bank may deposit in the following account and inform Sridhar swamigal.
NAME : P. VENKADESAN
A/C. NO. 619601015623
BANK : ICICI
BRANCH : THIRUVANNAMALAI
எனவே
பர்வத மலையின் காலமும் திருவண்ணாமலையின் காலம்போன்று 260 கோடி வருடங்கள்
என்று கருதப்படுகிறது. இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.
போளூருக்குத்தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து
வடமேற்கே 30 கி.மீ. தொலை விலும், செங்கத்திலிருந்து வடகிழக்கே 30 கி.மீ.
தொலைவிலும் உள்ளது.
இந்தமலை `கடலாடி' என்னும்
கிராமத்தையும், தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்தையும்தன் அடிவாரத்தில்
கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இம்மலையின் பரப்பளவு 5500
ஏக்கர். மலையின் உயரம் சுமார் 4500 அடிகள். இம்மலையைச் சுற்றிலும் 365
குளங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.
இம்மலையைச்
சுற்றிலும் ஏழுசடைப்பிரிவுகள் உள்ளன. பர்வத மலையின் முன்பாகம் தென்மாதி
மங்கலத்திலும், பின்பாகம் கடலாடி கிராமத்திலும் உள்ளள. எனவே இரு வழிகளிலும்
மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது
திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி' என்றும் கூறுகின்றனர்.
இதுதவிர
கந்தமலை, அகத்தியமலை, மங்களமலை, நந்தி மலை என்றும் இந்த மலை
அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏதாவது ஒன்றின் பெயரை நம்பிக்கையுடன் நாம்
சொன்னால், வாழ்க்கையில் செல்வம், புத்திரப்பேறு, முதலியவற்றைப்பெற்று
இறுதியில் முக்தி இன்பம் அடையலாம்.
பர்வதமலை மிக
உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி' என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல
அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி' என்றும், ஒரு காலத்தில்
அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி' என்றும்,
பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்'
எனவும் பெயர் பெற்றிருக்கிறது.
சிலர் இம்மலையை
`ஸ்ரீசைலம்' என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம்
புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின்
இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட
சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம்
செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள்
திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.
இதனால்
இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும்
நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான
மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால்
மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை' என்று
அழைக்கப்படுகிறது.
சிவனை நோக்கிக் கடுந்தவம்
புரிந்து தன்னை யாரும் வெல்லக்கூடாது என வரம் பெற்ற சூரபதுமன் தனது
தவவலிமையால் தேவர்களை கொடுமை செய்தான். இதனால் ஈசனின் உத்தரவுப்படி
முருகப்பெருமான் பர்வதமலையை சுற்றிவந்து தென்பாதிமங்கலம், காஞ்சி, கடலாடி,
மாம்பாக்கம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய 7 ஊர்களில் லிங்கத்தை
நிறுவி வழிபட்டார்.
இதனால் இந்த மலை கந்தமலை என்ற
பெயர் பெற்றது. அதுபோல அகத்தியருக்கு இந்த மலையில்தான் ஈசன்முதன் முதலில்
தன் திருமண காட்சியை காட்டினார். அந்த மலையில் அகத்தியர் திரிசூலத்தை
நட்டதால் அது திரிசூலமலை என்று கூறப்படுகிறது. இம்மலையில் உள்ள
தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365
நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும்.
பிரம்மா,
விஷ்ணு, இந்திரன், 12 கோடி சூரியர்கள் இரு கோடி அசுவணி தேவர்கள் மற்றும்
தேவதைகள், 11 கோடி உருத்திரர்கள், 8 கோடி வசுக்கள், கோடி ரிஷிகள், 18
வகைகளைச் சேர்ந்த தேவ கணங்கள் ஆகிய அனைவரும் இம்மலையை வலம் வந்து அநேகதான
தர்மங்கள் செய்ததால் தங்கள் துன்பங்கள் நீங்கப் பெற்று இன்புற வாழ்ந்து
இறுதியில் இறைவன் பாதம் பெற்றனர்.
நினைத்தாலே
முக்தி தருவது திருவண்ணாமலை நினைக்காமலே முக்தி தருவது பர்வதமலையாகும்.
இம்மலை உச்சியிலுள்ள கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப்புகழ்
உடையது. தென்கைலாயம் என்று இந்த மலை போற்றப்படுகிறது. இந்த மலையானது அறம்,
பொருள், இன்பம், மோட்சம் இவை நான்கினையும் ஒரே இடத்தில் அளிக்கக் கூடிய
பெருமை பெற்றது.
மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை
பொதிகைமலை, வெள்ளியங்கிரிமலை, சதுரகிரிமலை போன்ற பல சித்தர்களின்
மலைகளுக்குக் குறிப்பிட்ட சில மாதங்கள் அல்லது நாட்களுக்குத்தான் செல்ல
முடியும். ஆனால் வருடம் முழுவதும் பர்வதமலைக்கு சென்று வரலாம். நவநாத
சித்தர்கள், பதினெண் சித்தர்கள் எனச் சித்தர்கள் பலர் உறையும் புனித இடமாக
பர்வதமலை கருதப்படுகிறது.
சித்தர்கள் இம்மலையில்
இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும்
இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். ஆனால்
பர்வதமலையில் பிடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக கருதப்படுகிறது.
இங்கு
சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். இங்கு குகை நமச்சிவாயர்,
குருநமச்சிவாயர் ஆகியோர் கரு நொச்சியுண்டு இளமை பருவத்தை அடைந்தனர். இங்கு
சித்தர்கள் இரவில் ஜோதி தரிசனம் காண்பதாக நம்பப்படுகிறது. தியானம்
செய்வதற்கு இந்தமலை உகந்தமலையாகும். சித்தர்கள் தேனீக்கள் வடிவில்
இந்தமலையில் உலவுவதாக சொல்கிறார்கள்.
பர்வதமலையில்
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு நடுஜாமத்தில் பன்னிரண்டு சித்தர்கள் சங்கு,
கஞ்சதாளம் முதலான இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வலம் வருவதாக இரவில் அங்கு
வயலுக்குக் காவல் இருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர். இவர்களில்
ஒருசிலரின் கண்களுக்கு வலம் வந்த சித்தர்கள் தென்பட்டதாகவும், சிலருக்கு
இன்னிசை மட்டும் கேட்டதாகவும் சொல்கின்றனர்.
தவசிகள்
யோகம் செய்வதற்காகவே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில்
ஆலயம் அமைத்து இதனை யோகமலை ஆக்கியிருக்கின்றனர். இந்த மலையில்
சகலநோய்களையும் தீர்க்கும் `பாதாள சுனைத்தீர்த்தம்' உள்ளது.
இச்சுனையின்கீழ் சூட்சும தேகத்தோடு (ஆன்மா) செல்லக்கூடிய வழி உள்ளது.
சித்தர்கள்
தங்கும் தாமரைத் தடாகம், வாழைத் தோட்டம், காராம்பசு போன்றவை இங்கு
உள்ளதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். பூண்டி மகான் இங்கு வந்து பாதிமலை
ஏறும்போதே மலையை நோக்கியதும் சிவலிங்கம் தொடர்வடிவமாகக் காட்சி தரவே
`காலால் மிதிப்பது கூடாது' என்று மலைமீது செல்வதை நிறுத்தி விட்டு மலையைச்
சுற்றிச் கிரிவலம் மட்டும் செய்து விட்டு வணங்கிச் சென்றார் என்று
கூறப்படுகிறது.
மலைக்கு வருபவர்களின் வழித்துணைக்கு
அடிவாரம் முதல் கடப்பாறைப்படி வரை பைரவர் (நாய்) ஒன்று நமக்குத்துணைக்கு
வரும் அதிசயம் நடக்கிறது. பக்தர்கள் பர்வத மலையில் மலையேறு கையில்
சித்தர்கள் ஓரிடத்தில் பூனை வடிவாகவும், வேறோர் இடத்தில் மான் வடிவாகவும்
தரிசனம் தந்ததாகத் தென்மாதி மங்கலம், கடலாடிக் கிராமத்துப்பெரியவர்கள்
கூறுகின்றனர்.
இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள்.
இறங்கும் பாதை
பர்வதமலை மகான் மௌனயோகி விடோபானந்தர் குருஜி மடம் இங்கு வரும் பக்தர்களுக்குச் செய்யும் சேவைகள் மிகவும் போற்றப்பட வேண்டியவை. அவ்வளவு உயரத்தில் முற்றிலும் கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்ட மடம். கீழ் தளத்தில் பக்தர்கள் இரவில் வெளியில் குளிர் மற்றும் மழையில் சிரமப்படாமல் இரவு தங்கிச் செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் ஜெனரேட்டர் போட்டு சுடசுட உணவு அளிக்கிறர்கள். (மேலே எந்தவிதமான மின் வசதியும் கிடையாது) படுத்து உறங்கப் பாய்களும் தந்து உதவுகிறார்கள்.
முன்பெல்லாம் குடிக்கும் தண்ணீர் கீழே இருந்துதான் பாக்கெட் தண்ணீராக சுமை கூலி கொடுத்துக் கொண்டு வருவார்கள். இப்பொது 20000 லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்கு இன்னும் கட்டிடம் விரிவுபடுத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
4000 அடி உயர மலையில் எந்த வசதியும் இல்லாத இடத்தில் இவ்வளவு உதவிகள் அவர்கள் செய்து வருவது மிகவும் உயர்ந்த சேவையாகும். அந்த மடத்திற்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9486268396, 9688505403 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விபரங்கள் அறியலாம். இங்கு ராஜராஜேஸ்வரி விக்ரகம் உள்ளது. இங்கு அமர்ந்து தியானம் செய்ய விரும்புபவர்கள் அமைதியாகச் செய்யலாம்.
பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். நாங்கள் ஏறும்போது தென்மாதிமங்கலம் வழியாகச் சென்றோம். மேலே மடத்தில் இருந்த சுவாமிஜி அவர்கள் இறங்கும்போது கடலாடி வழியில் செல்லுங்கள்,அது சற்று தூரம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்ததால் அந்த வழியில்தான் வந்தோம். மலையை விட்டு இறங்கி ஒரு கிலோ மீட்டரில் அவர்கள் மடத்தின் ஆசிரமம் உள்ளது. பல வருடங்களாக இருந்த மகான் மௌனயோகி குருஜி அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்புதான் முக்தியடைந்ததாகத் தெரிவித்தார்கள்.
அந்த மடத்தின் முகவரி:
பருவதமலை மகான் மௌனயோகி மடம்
கடலாடி (P.O)
திருவண்ணாமலை மாவட்டம்-606908
அன்னதானத்திற்கு உணவுப்பொருட்கள் தர விரும்புபவர்கள் மேற்கண்ட விலாசத்தில் சேர்த்தால் அவர்கள் மேலே கொண்டுபோய் சேர்த்துக்கொள்கிறார்கள்.
மேலே சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்களும் தாங்கள் எந்த விதத்தில் செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டால் நாம் சொல்லும் தொகைக்கு ஏற்ப அபிஷேகப் பொருட்களை அவர்களே மேலே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்கள். நாம் பொருட்களை சுமக்கும் சிரமம் இல்லை. திருவண்ணாமலை போல் இங்கும் 26 கிலோ மீட்டர் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
பர்வதமலை பற்றிய சில யூடியூப் வீடியோ இணைப்புகள் கீழே
Parvathamalai Video1
Parvathamalai2
Parvathamalai 3
கடப்பாறைப்படி ஆரம்பிக்கும் இடம்
மௌனயோகி மடம்
Parvathamalai 4
Parvathamalai
ஓடுகின்ற மேகம் வந்து நம்மைத் தொட்டுப் பேசும் காட்சி
பர்வதமலை மேலிருந்து இறங்கும்போது
Parvathamalai is located near to Thenmathimangalam village, which is 30 kms from Thiruvannamalai(Arunachala).The hill(Parvatamalai) is 4500 feet(Approx) high from the sea level. On the top of the hill, Lord Mallikarjunaswamy(Sivan) temple is located, which is believed to be 2000 years old. This hill is full of herbal(mooligai) plants.
It is believed that Celestial beings come down to Parvatha Malai
during the brahma muhurtham to offer prayers to lord shiva here. The
climb to this mountain is quite difficult with some parts of the climb
being nearly 90 degrees. Once one reaches the top, there is a nice
fragrance that makes the person sleep and once the person wakes up, he
sees that pooja has been performed for the lord. It is believed that
human beings should not see the prayers offered by Celestial beings and
hence they go to sleep during those hours. Sri. Chandrasekara Saraswathi
Swamigal had in his bashyam about this hills said that lord shiva and a
lot of siddha purushals live in the hill range in and around
tiruvannamalai and it is sacrilegious even to set one's foot on these
ranges.
visit the following sites to know about parvatha malai : http://arunachalagrace.blogspot.com/2007/01/parvathamalai-hill.htmlhttp://www.google.com/url?sa=D&q=www.tiruvannamalaiguide.com/Parvatha-Malai.php&usg=AFQjCNHJp6xr-UpROEiwf1hfazufrI-3sQ http://www.google.com/url?sa=D&q=http://temple.dinamalar.com/New.aspx%3Fid%3D1034&usg=AFQjCNH043cHfFOpjYCnbdFhx7fqOKEb2g http://www.google.com/url?sa=D&q=http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp%3Fnews_id%3D1818%26ncat%3DH&usg=AFQjCNF25o1lIeU_FUdoit1lNnP_3XsBRw... http://www.google.com/url?sa=D&q=http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx%3Fcid%3D1799&usg=AFQjCNG4UwPSw-O2tH8f4g5wizwZrAX0Uw http://www.google.com/url?sa=D&q=http://www.hindu.com/2006/12/05/stories/2006120503010200.htm&usg=AFQjCNFjCHlY3-6gOYNl4vPrxqVP2UGJrQ
For details in english :
http://parvathemalai.blogspot.in/search/label/About%20Temple
Watch amazing videos of parvathamalai
I have been to this hill for the first time on 17.01.2000. Till
now I have gone 52 times and have taken more than 1000s of people
varying from 3 years to 85 years..!
Very special place where we could FEEL the presence of GOD.
Mouna yogi Vitobhaanandha swamigal was in the top of the hill for
more than 15 years. He was serving the devotees coming by climbing the
hill for 7 hrs atleast. He will prepare lunch , provide thick bed
sheets(kambalis) for the devotees. He has constructed a small building
where now atleast 300 persons can sleep in the night. He passed away
during feb 2010.
.
Those who wish to transfer money thro Bank may deposit in the following account and inform Sridhar swamigal.
NAME : P. VENKADESAN
A/C. NO. 619601015623
BANK : ICICI
BRANCH : THIRUVANNAMALAI
மேலும் விவரங்களுக்கு உடன் அணுகவும் :
98847 18 324