மகளிர் தின வாழ்த்துக் கவிதை 2014
(08.03.2014 5.25pm.)
பெண்களை
போற்றிடுவோம் - எந்நாளும்
பெண்களை
போற்றிடுவோம்
கண் இமையாய்
நம்மை காத்திட்ட தாயாய்
பெண்களை
போற்றிடுவோம்
உண்ணாதிருந்தே
உணவிடு வாளே
தூங்காதிருந்தே
தூங்கிடச் செய்வாள்
தாங்கியே துயரை
ஏங்கியே அழுவாள்
நீங்காதிருப்பாள்
நம் மனத்தோடே (பெண்களை . . .)
உடன் பிறந்தவளே
ஊக்கம் அளிப்பாள்
படும் துயர்
கண்டு பதறிடு வாளே
உடும்புப்
பிடியாய் உள்மனம் புகுந்தே
தடுத்தாட்கொண்டே தைரியம் அளிப்பாள் (பெண்களை . . .)
தோழியாய் இருந்தே
துணை நிற்பாளே
விழி பார்த்தவளே
வழி உரைத்திடுவாள்
சோழியாய் சிதறும்
மனதை மாற்றி
வழி காட்டிடுவாள்
வாழ்வில் வளர (பெண்களை . . .)
துணையாய்
வந்திடும் நிழல் போல் அவளே
மனைவியை வந்து
துணை நிற்பாளே
மனை
சிறந்திடவே தன மனை மறப்பாள்
துணையாய் வருவாள்
தூக்கத்தில் கூட (பெண்களை . . .)
(செந்தமிழ் தேன் மொழியாள்- மெட்டில் பாடிப் பார்க்கவும்)
-தேனுபுரீஸ்வர
தாசன் இல. சங்கர்.