Wednesday, May 4, 2011

அட்சய திருதியை 06-05-2011

"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
 
 
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சைத்ரா மாத வளர்பிறையின் முதல் திதி (புது வருட துவக்கம்), அஷ்வினா மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி (விஜய தசமி ), வைஷாஹா மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி (அக்ஷய திரிதிய-பர்ஷு ஜெயந்தி ) மற்றும் கார்த்திகா மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி ஆகியவை "மூன்றரை (31/2) முஹுர்த்தம்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முஹுர்த்தத்தை வழங்குகின்றன. சோதிட சாஸ்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உச்ச பிரகாசத்துடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் கணேஷ்ஷிடம் (விநாயகர்) எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.

அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.

இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம ஷேத்ரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அக்ஷய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

பொதுவாக இந்த நாளில் கடவுள் வாசுதேவரை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் அனுசரிப்பர். கங்கை நதியில் ஒரு முழுக்குப் போடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.

வேதப்புத்தகங்கள் இந்த நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு அதிர்ஷ்டமுள்ள நாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூஜைகளும் அனுசரிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை தர்மம் செய்கின்றனர். இந்த நாளில் விஷ்ணுவை வணங்குகின்றனர். தீபாராதனை செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

பெங்காலில், அக்ஷய திருதியை நாளில், "ஹல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது கணேஷ் மற்றும் லக்ஷ்மியை வணங்கி புதிய கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். பெங்காலிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்கின்றனர்.

இந்த நாள் ஜாட் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்கிறார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு சகுனங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன. அக்ஷய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. அது அன்பூஜா முஹூரத்தாக கருதப்படுகிறது.

செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
 


ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின்
நண்பர் குசேலர், ஒரு பிடி அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை
சந்திக்கச் சென்றார். குசேலரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலை எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘அட்சயம்!’’ என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது; குசேலர் ‘குபேர சம்பத்து’ பெற்றார். குசேலருக்கு, கண்ணன் அருள் புரிந்தது அட்சயத் திருதியை திருநாள் ஆகும்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.

அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

ஸ்ரீபரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் இந்த அட்சய திருதியை திருநாளில்தான். அட்சய திருதியை அன்று ஏழைக்கு ஆடை தானம் அளித்தால் மறுபிறவியில் ராஜ வாழ்வு கிட்டும்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி?

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடியாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடு வேள்விகளிலும் மனதை செலுத்த முன்வரவேண்டும். தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது போய் ஆடிக்கழிவு என்று ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை மக்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

அட்சய திருதியை ஒட்டி நகை வாங்கினால் செல்வம் சேருமா?
சென்ற ஆண்டு நகை வாங்கியவர்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

தமிழகத்தில் இப்படி என்றால் மத்தியப் பிரதேச மக்கள் அதையும் தாண்டி ஒரு படி மேலே போய்விட்டார்கள். அட்சயத் திருதியை தினம் நகை வாங்க உகந்த நாள் என்று தமிழகத்தில் கருதப்படுவது போல, ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு அந்த நாள் வேறு எந்த நாளைக் காட்டிலும் சுபமுகூர்த்த நாள் என்கிற எண்ணம் அதிகம். "சரி திருமணம்தானே! நடக்கட்-டுமே, நல்லதுதானே!' என்கிறீர்களா? அதுதான் இல்லை. . அத்தனையும் "பால்ய விவாகம்' எனப்படும் குழந்தைத் திருமணங்-கள். பத்து வயது, ஏழு வயது, ஆறு வயது, ஏன் மூன்று வயதுக் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து மகிழ்கிறார்கள் அந்த மாநில மக்கள்.

 
அட்சய திருதியை அன்று...
கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 
புனித நீராடல்

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

16 கருட சேவை!
அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர். இது அற்புத தரிசனமாகும்.
 
அட்சய திருதியை தின பூசை  முறை :
 
 அட்சய திருதியை தினத்தில் செய்ய வேண்டிய பூசை முறைகளைச் சுருக்கமாக நோக்குவோம். அந்நாளில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பூசை அறையில் கோலம் போட வேண்டும். லக்ஷ்மிநாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் (அவரவர்கள் விருப்பப்படி) படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்றவேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாக்ஷி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும். இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.

இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பர். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும். அதாவது அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது, கோடை காலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கிக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், சந்தான பாக்யம் நிகழும் என்பர்.

 
பெண்கள் சொல்ல வேண்டிய  பாஞ்சாலி அபய மந்திரம்!வைகாசி மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயா

ச்யுத!

கோவிந்த! புண்டரீகாக்ஷ!

ரக்ஷமாம் சரணாகதம்

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

No comments:

Post a Comment